Ajith Celebrate daughter birthday spending with family in Australia
ஆஸ்திரேலியா கடலில் மகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் அஜீத் பேமிலி!
ஒவ்வொரு படத்தையும் முடித்ததும் எப்படி திருப்பதிக்குசென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறாரோ அதேபோல் தனது மனைவி , மகளுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் சென்று வருவதையும் கடைபிடித்து வருகிறார் அஜீத். அந்த வகையில், தற்போது வீரம் படத்தை முடித்து விட்ட அவர், திருப்பதிக்கு சென்று முடி காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து விட்டு வந்தார்.
அதையடுத்து இப்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றிருக்கிறார். அங்குதான் புதுவருடம் மற்றும், தனது மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடுகிறாராம் அஜீத். அங்குள்ள சிட்னி-வெலிங்டன் கடல் மார்க்கத்தில் கப்பலில் பயணம் செய்தபடி மகளின் பிறந்த நாளை கொண்டாட்டத்தில் ஈடுபடப்போகிறார்களாம் அஜீத்-ஷாலினி தம்பதியர்.

ஆக, வருகிற 9-ந்தேதி வரை நாட்களை ஆஸ்திரேலியாவில் ஜாலியாக கழித்து விட்டு 10-ந்தேதி வீரம் படம் திரைக்கு வருவதால் அதற்குள்ளாக சென்னை திரும்புகிறாராம் அஜீத். அதனால், வீரம் படம் வெளியீட்டு விழாவை தமிழகமெங்கும் மிகுந்த பரபரப்பாக கொண்டாடப்போகிறார்களாம் அவரது ரசிக கோடிகள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.