Aimbu in ajith film . Ajith latest news . Simbu act guest roll in ajith film.
இந்த வருடத்தில் சிம்புவின் படம் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஒரு கெஸ்ட் அபியரன்ஸ் பண்ணியிருந்தார். அதன் பின் மனுஷன் ஆளையே காணோம்.
அவர் படம் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் ஆனால் அது இன்னும் முடிந்த பாடில்லை. இதற்கிடையில் தான் சிம்பு கவுதம்மேனன் நடிக்க படத்தில் கமிட் ஆனார். படத்திற்கு சட்டென்று மாறுது வானிலை என்றும் தலைப்பு வைத்தார்கள். இந்த படத்தை முடித்த கையோடு கவுதம் மேனன் அஜித் நடிக்கும் படத்தை இயக்கப்போவது ஊர் உலகம் அறிந்த விஷயம்தான். இங்க தான் திடீரென்று ஒரு திருப்புமுனை வந்திருக்கிறது.
நான் தல ரசிகன் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு நீண்ண்ண்ட நாட்களாகவே அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை. அஜித்தும் கவுதம்மேனனும் கதை விவாதத்தில் இருக்கும்போது கவுதமிடம் அஜித் சொன்ன விஷயம் சிம்புவுக்கு ஹார்ட் அட்டேக் வர அளவிற்கு சந்தோஷத்தை தந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆமாங்க அஜித் படத்தில் சிம்பு நடிக்க போறார். இது அஜித்தே சொன்னது தானாம் என் படத்தில் ஆர்யா, விதார்த் போன்றவர்கள் நடித்துவிட்டார்கள் என் ரசிகன் என் தம்பி சிம்பு இந்த படத்தில் என்னுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னாராம் கவுதமிடம், உடனே கவுதம் சிம்புவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அதிர்ச்சியும் சந்தோஷத்திலும் மூழ்கிப்போயுள்ளாராம் சிம்பு
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.