Breaking News
Loading...
Wednesday, September 18, 2013

Info Post
 Actor Ajith
"நல்ல மனிதன்" என்ற பெயர் வாங்குவதுதான் மிக கடினமான விஷயம். தமிழ் சினிமாவில் "நல்ல மனிதன்" என்ற பெயரெடுத்தவர் அஜீத்.

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமார் தனது செயல்பாடுகள் மூலம் ரசிகர்கள் மனதில் மேன்மேலும் உயர்ந்து வருகிறார்.

அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று பிரியப்பட்ட அஜீத், கேளம்பாக்கத்தில் இடம் வாங்கி தன பணியாட்கள் பெயரில் பதிவு செய்து உள்ளார்.

இவர்களுக்கு தனது சொந்த செலவிலேயே வீடு கட்டித்தர முடிவு செய்த அஜீத், அதற்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளார். அதற்கான பூமி பூஜை நடந்து முடிந்துள்ளது. கட்டுமான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன.

ரஜினி தன்னிடம் வேலை பார்த்த 50 பணியாட்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு வீடு கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம். இது போன்று பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் அஜித். நம் இறப்புக்கு வருந்துபவர்கள் எண்ணிக்கைதான் நாம் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் என்று நண்பர்களிடம் அடிக்கடி கூறுவாராம் அஜீத்.

அந்த வகையில் அஜீத் பல குடும்பங்களில் தெய்வமாக பூஜிக்கப்பட்டு வருகிறார் என்பதே நிதர்சனம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Popular Posts